களவழி நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட
ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து
கண்காணா யானை யுதைப்ப விழுமென
மங்குன் மழையி னிதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து.

விளக்கவுரை :

12. ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
செஎய்பொரு தட்ட களத்து.

விளக்கவுரை :

14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்
பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை யட்ட களத்து.

விளக்கவுரை :

15. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால் பொருத களத்து.

விளக்கவுரை :

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books