களவழி நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்

16. பரும வினமாக் கடவித் தெரிமறவர்
ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும்
வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை யட்ட களத்து.

விளக்கவுரை :

17. ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
தாக்கி யெறிதா வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே
ஆர்த்தம ரட்ட களத்து.

விளக்கவுரை :

18. நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து
தடற்றிடங் கொள்வாட் டளையவிழுந் தார்ச்சே(ய்)
உடற்றியா ரட்ட களத்து.

விளக்கவுரை :

19. இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான் மூழ்திக்
கடைமணி காண்வரத் தோற்றி - நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன்
புக்கம ரட்ட களத்து.

விளக்கவுரை :

20. இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை
குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்
சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து.

விளக்கவுரை :

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books