களவழி நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்

21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து
கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த்
தொல்வலி யாற்றித் துளங்கினவாய் மெல்ல
நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட்
சினமால் பொருத களத்து.

விளக்கவுரை :

22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொ ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
பாடா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

23. ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு
செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற் றானைக் கொடித்திண்டோர்ச் செம்பியன்
செற்றாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும்
பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்
பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கேற்ற
கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
நண்ணாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானந் துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books