களவழி நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்

26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர் வியன்றமிடாப் போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை வாளார் பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ டற்ற தடக்கைகொண் டோடி
இகலன்வாய்த் துற்றிய தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

29. கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபாட்டி
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும்
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால் பொருத களத்து.

விளக்கவுரை :

30. மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட வொண்குருதி கொள்களி றீர்க்கு
மடங்கா மறமொய்ம்பிற் சினமால்
அடங்காரை யட்ட களத்து.

விளக்கவுரை :

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books