கார் நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்



கார் நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்

6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

விளக்கவுரை :

7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை.

விளக்கவுரை :

8. மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வால்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணுரும் பூழ்த்த புறவு.

விளக்கவுரை :

9. உருவினை கண்மலர்போற் பூத்தன கார்க்கோற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து.

விளக்கவுரை :

10. வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும்.

விளக்கவுரை :

கார் நாற்பது, மதுரைக் கண்ணங் கூத்தனார், kaar narpathu, madurai kannang koothanaar, tamil books