கார் நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்



கார் நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பொழல் தாழ
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து

விளக்கவுரை :

2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

விளக்கவுரை :

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது

3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே
நெருந லொருத்தி திறத்து.

விளக்கவுரை :

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்@ பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடம பசலை மருந்து.

விளக்கவுரை :

5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.

விளக்கவுரை :

கார் நாற்பது, மதுரைக் கண்ணங் கூத்தனார், kaar narpathu, madurai kannang koothanaar, tamil books