களவழி நாற்பது
36 - 40 of 40 பாடல்கள்
36. ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே
காவிரி
நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப
மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
ஆவுதை
காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர்
முரசொடு
முத்தடைக்
கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம்
புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
38. பருமப் பணையெருத்திற் பல்யானை
புண்கூர்ந்(து)
உருமெறி
பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற்
பொன்னார
மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்
துன்னாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
39. மைந்துகால் யாத்து மயங்கிட
ஞாட்பினுட்
புய்ந்துகால்
போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய்
தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ
வட்ட களத்து.
விளக்கவுரை :
40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால
முழுவனபோல்
எல்லாக்
களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற்
பணைமுழங்கு
போர்த்தானைடச் செங்கட் சினமால்
கணைமாரி
பெய்த களத்து.
விளக்கவுரை :
41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங்
கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங்
கூறு மறைகேட்ப போன்றவே
பாடா
ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
களவழி நாற்பது முற்றிற்று
