நல்வழி 6 - 10 of 40 பாடல்கள்
6. உள்ளது ஒழிய ஒருவர்க்(கு)
ஒருவர்சுகம்
கொள்ளக்
கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி
மீண்டும் கரையேறினால் என்
உடலோடு
வாழும் உயிர்க்கு.
விளக்கவுரை :
7. எல்லாப்படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
பொல்லாப்
புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார்
ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார்
பேசார் பிறர்க்கு.
விளக்கவுரை :
8. ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த
ஆயினும்ஊழ்
கூட்டும்
படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை
காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது
காணும் தனம்.
விளக்கவுரை :
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்
நாளுமவ்வா(று)
ஊற்றுப்
பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல
குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை
என மாட்டார் இசைந்து.
விளக்கவுரை :
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார்
வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும்
அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று)
இட்டு, உண்டு, இரும்
விளக்கவுரை :
