நல்வழி 11 - 15 of 40 பாடல்கள்
11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு
ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு)
அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு
வாழ்தல் அறிது.
விளக்கவுரை :
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு,
விளக்கவுரை :
13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை
யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம்
புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம்
புவியதன் மேல்.
விளக்கவுரை :
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை
பேசுங்கால்
இச்சைபல
சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு
வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை
சால உறும்.
விளக்கவுரை :
15. சிவாய நம என்று சிந்தித்
திருப்போர்க்கு
அபாயம்
ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே
மதியாய் விடும்.
விளக்கவுரை :
