நல்வழி 16 - 20 of 40 பாடல்கள்
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்
குணம்கொடையால்
கண்ணீர்மை
மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா
ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்
என்றே அறி.
விளக்கவுரை :
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால்
எய்த
வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து
அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை
பொங்குமோ மேல்?
விளக்கவுரை :
18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார்
பேருலகில்
உற்றார்
உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம்
கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம்
கொடுத்தாலும் தாம்.
விளக்கவுரை :
19. சேவித்தும் சென்றிரந்தும்
தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும்
பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி
அரிசிக்கே நாம்.
விளக்கவுரை :
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை
முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும்
நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு
வித்தாய் விடும்.
விளக்கவுரை :
