ஏலாதி 51 - 55 of 80 பாடல்கள்
51. உண்ணீர் வளம்குளம் கூவல் வழிப்புரை
தண்ணீரை
அம்பலந்தான் பாற்படுத்தான் -பண்ணீர
பாடலோ(டு)
ஆடல் பயின்றுயிர் செல்வானாய்க்
கூடலொ(டு)
ஊடலுளான் கூர்ந்து.
விளக்கவுரை :
52. இல்லிழந்தார் கண்ணிழந்தார்
ஈண்டியசெல் வம்இழந்தார்
நெல்லிழந்தார்
ஆணிரை தான்இழந்தார்க்(கு) -எல்உழந்து
பண்ணியூண்
ஈந்தவர் பல்யானை மன்னராய்
எண்ணிஊண்
ஆர்வார் இயைந்து.
விளக்கவுரை :
53. கடம்பட்டார் காப்பில்லார்
கைத்தில்லார் தங்கான்
முடம்பட்டார்
மூத்தார்மூப் பில்லார்க்(கு) - உடம்பட்(டு)
உடையராய்
இல்லுள்ஊண் ஈத்துண்பார் மண்மேல்
படையராய்
வாழ்வார் பயின்று.
விளக்கவுரை :
54. பார்ப்பார் பசித்தார் தவசிகள்
பாலர்கள்
கார்ப்பார்
தமையாதும் காப்பிலார் - தூப்பால
நிண்டாரால்
எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம்
பற்றவாழ் வார்.
விளக்கவுரை :
55. ஈன்றார்ஈன் கால்தளர்வார் சூலார்
குழவிகள்
மான்றார்
வளியான் மயங்கினார்க்கு - ஆனார்என்(று)
ஊண்ஈய்த்(து)
உறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம்
காண்ஈய்த்து
வாழ்வார் கலந்து.
விளக்கவுரை :
