ஏலாதி 46 - 50 of 80 பாடல்கள்



ஏலாதி 46 - 50 of 80 பாடல்கள்

46. களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்
ஒளியான் விருந்துக்(கு) உலையான் - எளியாரை
எள்ளான்நீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து.

விளக்கவுரை :

47. பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று
பரியா அடியார்ப் பறியான் - கரியார்சொல்
தேறான் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்
மாறான்மண் ஆளுமாம் மற்று.

விளக்கவுரை :

48. வேற்றரவம் சேரான் விருந்தொழியான் தன்இல்லுள்
சோற்றரவம் சொல்லியுண் பானாயின் - மாற்றரவம்
கேளான் கிளைஓம்பின் கேடில் அரசனாய்
வாளான்மண் ணாண்டு வரும்.

விளக்கவுரை :

49. யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோ(டு)
ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்
எண்ணனாய் மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து.

விளக்கவுரை :

50. எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே இவற்றோடு - கொள்ளென
அன்புற்(று) அசனம் கொடுத்தான் துணையினோ(டு)
இன்புற்(று) வாழ்வான் இயைந்து.

விளக்கவுரை :

ஏலாதி, கணிமேதையார், ealaathi, kanithamethaiyaar, tamil books