ஏலாதி 41 - 45 of 80 பாடல்கள்



ஏலாதி 41 - 45 of 80 பாடல்கள்

41. குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய்
ஈ(டு)அற் றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து.

விளக்கவுரை :

42. கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலான்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ஆண்(டு) அரசு.

விளக்கவுரை :

43. சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான் யார்திறத்தும்
வா(து)உவவான் மாதரார் சொல்தேறான் - காதுதாழ்
வான்மகர வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான்மகர வாய்மாடத் தான்.

விளக்கவுரை :

44. பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான் யாவரையும்
வையான் வழிசீத்து வால்அடிசில் - நையாதே
ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு.

விளக்கவுரை :

45. இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான் மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால்
செல்வான் செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.

விளக்கவுரை :

ஏலாதி, கணிமேதையார், ealaathi, kanithamethaiyaar, tamil books