பழமொழி நானூறு
386 - 390 of 400 பாடல்கள்
386. காப்பிகந்(து) ஓடிக் கழிபெருஞ்
செல்வத்தைக்
கோப்பெரியான்
கொள்ளக் கொடுத்திராதென் செய்வர்?
நீத்தப்
பெரியார்க்கே யாயினும் 'மிக்கவை
மேவிற்
பரிகாரம் இல்'.
விளக்கவுரை :
34. வீட்டு நெறி
387. எண்ணக் குறைபடாச் செல்வமும்
இற்பிறப்பும்
மன்னர்
உடைய உடைமையும் - மன்னரால்
இன்னர்
எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
'தம்மை உடைமை தலை.'
விளக்கவுரை :
388. அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய
மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு)
ஏமம் சிறுகாலைச் செய்யாரே
'கொல்லிமேல் கொட்டு வைத்தார்'.
விளக்கவுரை :
389. நட்டாரை யாக்கிப் பகைதணித்து
வையெயிற்றுப்
பட்டார்
துடியிடை யார்ப்படர்ந்(து) - ஒட்டித்
தொடங்கினார்
இல்லத்த தன்பின் 'துறவா
உடம்பினான்
என்ன பயன்?'
விளக்கவுரை :
390. இல்வாழ்க்கை யானும் இலதானும்
மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை
போக நடுவுனின்(று) - எல்லாம்
ஒருதலையாச்
சென்று துணியா தவரே
'இருதலையும் காக்கழித் தார்'.
விளக்கவுரை :