பழமொழி நானூறு
381 - 385 of 400 பாடல்கள்
381. மாரியொன் றின்றி வறந்திருந்த
காலத்தும்
பாரி
மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து
கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.
விளக்கவுரை :
382. ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத்
தாமுடைய
மாற்றார்
கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை
மண்ணசுற்றிக்
கொள்நிற்கும் ஆற்றலார்க்(கு) என்னரிதாம்
'பெண்பெற்றான் அஞ்சான் இழவு'.
விளக்கவுரை :
383. பயன்நோக்கா(து) ஆற்றவும்
பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி
ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப்
பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.
விளக்கவுரை :
384. மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன்
பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள
தூஉம் மறைக்கும் அதனால்
'இரந்தூட்குப் பன்மையோ தீது'.
விளக்கவுரை :
385. தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா
தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை
உண்கண் கனங்குழாய் ! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.
விளக்கவுரை :