பழமொழி நானூறு
376 - 380 of 400 பாடல்கள்
376. கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும்
சார்ந்தார்க்குத்
தூஉய்ப்
பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்புத்தான்
'வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே
றாகி விடும்'.
விளக்கவுரை :
377. அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று
ஈந்தாரைக் கொண்டார்
படுத்தேழை
யாமென்று போகினும் போக
அடுத்தேறல்
ஐம்பாலாய் ! யாவர்க்கே யாயினும்
'கொடுத்தேழை யாயினர் இல்'.
விளக்கவுரை :
378. இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும்
என்றெண்ணிக்
கரப்பவர்
கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைக்தோணி
நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.
விளக்கவுரை :
379. இரவலர் தம்வரிசை என்பார் மடவார்
கரவலராய்க்
கைவண்ணம் பூண்ட - புரவலர்
சீர்வரைய
ஆகுமாம் செய்கை சிறந்தனைத்தும்
'நீர்வரைய வாநீர் மலர்'.
விளக்கவுரை :
380. தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர
என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார்
என்னலோ வேண்டா 'கொடுப்பவர்
தாமறிவார்
தஞ்சீர் அளவு'.
விளக்கவுரை :