பழமொழி நானூறு 371 - 375 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 371 - 375 of 400 பாடல்கள்

371. இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.'

விளக்கவுரை :

33. ஈகை

372. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே - விரிபூ
விராஅம் புனலூர ! வேண்(டு)'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.

விளக்கவுரை :

373. கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல்
'சுரத்திடைப் பெய்த பெயல்'.

விளக்கவுரை :

374. பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே
வளநெடிது கொண்ட(து) அறாஅது அறுமோ
'குளநெடிது கொண்டது நீர்?'.

விளக்கவுரை :

375. நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books