இனியவை நாற்பது
36 - 40 of 40 பாடல்கள்
36. அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச்
செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங்
கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார்
விடுதல் இனிது.
விளக்கவுரை :
37. இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட்
டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென்
பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்
றுணர்தல் இனிது.
விளக்கவுரை :
38. சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா
ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும்
ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா
உடையான் விருந்து.
விளக்கவுரை :
39. பிச்சைபுக் குண்பான் பிளிறாமை
முன்இனிதே
துச்சி
லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே
ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம்
இலாமை இனிது.
விளக்கவுரை :
40. பத்துக் கொடுத்தும் பதியிருந்து
வாழ்வினிதே
வித்துற்குற்
றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல
நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற்
காழினியது இல்.
விளக்கவுரை :
இனியவை நாற்பது முற்றிற்று
