இனியவை நாற்பது
31 - 35 of 40 பாடல்கள்
31. அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ்
செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த
கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல்
ஆற்ற இனிது.
விளக்கவுரை :
32. சுற்றறிந்தார் கூறுங் கருமப்
பொருள்இனிதே
பற்றமையா
வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென
இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற்
பாங்கினியது இல்.
விளக்கவுரை :
33. ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம்
மிகஇனிதே
தானே
மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு
மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை
தடுத்தல் இனிது.
விளக்கவுரை :
34. எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால்
சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக்
கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர்
விடுதல் இனிது.
விளக்கவுரை :
35. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்
முன்இனிதே
முற்றான
தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப்
பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு
இனிது.
விளக்கவுரை :
