நல்வழி 36 - 40 of 40 பாடல்கள்
36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்
காலத்தில்
கொண்ட
கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம்
தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல்
வைப்பார் மனம்.
விளக்கவுரை :
37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம்
முதலாம்
அனைத்தாய
நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ
தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்
கில்லை விதி.
விளக்கவுரை :
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும்
தானென்றும்
அன்றென்றும்
ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம்
தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா
தேடும் பொருள்.
விளக்கவுரை :
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று
ஒருபொருளைத்
தப்பாமல்
தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே
ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே
ஆகுமாம் மூப்பு.
விளக்கவுரை :
40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்
தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா
சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா
சகமென் றுணர்.
விளக்கவுரை :
