நல்வழி 31 - 35 of 40 பாடல்கள்
31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம்
உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின்
நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின்
நன்று தனி.
விளக்கவுரை :
32. ஆறிடும் மேடும் மடுவும்போ
லாம்செல்வம்
மாறிடும்
ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும்
வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை
வீறும் உயர்ந்து.
விளக்கவுரை :
33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும்
கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு
நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு
நெக்கு விடும்.
விளக்கவுரை :
34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்
றுண்டாயின்
எல்லாரும்
சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும்
வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து)
அவன்வாயிற் சொல்.
விளக்கவுரை :
35. பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே
நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும்
நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும்
தோன்றா(து) உணர்வு.
விளக்கவுரை :
