பழமொழி நானூறு 351 - 355 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 351 - 355 of 400 பாடல்கள்

351. மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி ! எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் 'பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை'.

விளக்கவுரை :

352. முன்னின்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர !
'துன்னினார் அல்லார் பிறர்'.

விளக்கவுரை :

353. உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர !
'தாய்மிதித்து ஆகா முடம்'.

விளக்கவுரை :

354. தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால்
என்ன படினும் அவர்செய்வ செய்வதே
இன்னொலி வெற்ப! இடரென்னை 'துன்னூசி
போம்வழி போகும் இழை'.

விளக்கவுரை :

355. கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப ! பூந்தா மரைமேல்
'திருவோடும் இன்னாது துச்சு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books