பழமொழி நானூறு 356 - 360 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 356 - 360 of 400 பாடல்கள்

356. பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
'காதலோ(டு) ஆடார் கவறு'.

விளக்கவுரை :

32. அறம் செய்தல்

357. சிறத்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
'சுமையொடு மேல்வைப்ப மாறு'.

விளக்கவுரை :

358. வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'.

விளக்கவுரை :

359. மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்
சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! - 'பைங்கரும்பு
மென்றிருந்து பாகு செயல்'.

விளக்கவுரை :

360. ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறம் செய்வார்க்கு இரண்டுலகும்
'வேள்வாய்க் கவட்டை நெறி'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books