பழமொழி நானூறு 346 - 350 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 346 - 350 of 400 பாடல்கள்

346. நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் - கிளர்மணி
நீடுகல் வெற்ப ! நினைப்பின்றித் 'தாமிருந்த
கோடு குறைத்து விடல்'.

விளக்கவுரை :

347. பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
'உண்டஇல் தீயிடு மாறு'

விளக்கவுரை :

31. உறவினர்

348. தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட !
'உமிக்குற்று கைவருந்து மாறு'.

விளக்கவுரை :

349. சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.

விளக்கவுரை :

350. அல்லல் ஒருவர் அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
'மனைமர மாய மருந்து'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books