பழமொழி நானூறு 341 - 345 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 341 - 345 of 400 பாடல்கள்

341. நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.

விளக்கவுரை :

342. விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப்
பெற்ற விடக்கு நுகர்தல் 'கடல்நீந்திக்
கற்றடியுள் ஆழ்ந்து விடல்'.

விளக்கவுரை :

343. செறலிற் கொலைபுரிந்து சேண்உவப்பார் ஆகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் - பிறிதின்
உயிர்செகுத்(து) ஊன்துய்த்(து) ஒழுகுதல் ஓம்பார்
'தயிர்சிதைத்து மற்றொன்(று) அடல்'.

விளக்கவுரை :

344. நன்கொன்(று) அறிபவர் நாழி கொடுப்பவர்க்(கு)
என்றும் உறுதியே சூழ்க எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! அதுபோல 'நீர்போயும்
ஒன்றிண்டாம் வாணிகம் இல்'.

விளக்கவுரை :

345. தமனென்று இருநாழி ஈந்தவன் அல்லால்
நமனென்று காயினும் தான்காயான மன்னே!
அவனிவன் என்றுரைத்து எள்ளிமற் 'றியாரே
நமநெய்யை நக்கு பவர்'

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books