பழமொழி நானூறு 336 - 340 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 336 - 340 of 400 பாடல்கள்

336. நிறையான் மிகுநல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும் 'நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல்'.

விளக்கவுரை :

337. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஓல்வது
இறந்தவர் செய்யும் வருத்தம் 'குருவி
குறங்கறுப்பச் சோரும் குடர்.'

விளக்கவுரை :

338. உடுக்கை மருந்துறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.

விளக்கவுரை :

339. தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
'நுகத்துப் பகலாணி போன்று'.

விளக்கவுரை :

340. உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்
நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா
'புலைப்பொருள் தங்கா வெளி'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books