பழமொழி நானூறு
331 - 335 of 400 பாடல்கள்
331. எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல்
நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த
நோக்கினாய் ! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த
பாவை தனக்கு'.
விளக்கவுரை :
332. ஒக்கும் வகையான் உடன்பொருள்
சூதின்கண்
பக்கத்
தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்
மிக்க
சிறப்பின ராயினும் 'தாயார்க்கு
மக்களுள்
பக்கமோ வேறு'.
விளக்கவுரை :
333. தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து)அவர்
மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறியல்ல
சொல்லல்நீ பாண! - 'அறிதுயில்
யார்க்கும்
எழுப்பல் அரிது'.
விளக்கவுரை :
334. விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல்
நோக்கம்
கெழுமிய
நாணை மறைக்கும் - தொழுதையுள்
மாலையும்
மாலை மறுக்குறுத்தாள் அஃதால்
'சால்பினைச் சால்பறுக்கு மாறு'.
விளக்கவுரை :
335. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே
தமியர் புகல்வேண்டா - தீமையான்
ஊர்மிகின்
இல்லை கரியோ ஒலித்துடன்
'நீர்மிகின் இல்லை சிறை'.
விளக்கவுரை :