பழமொழி நானூறு 326 - 330 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 326 - 330 of 400 பாடல்கள்

326. இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற் றன்னையரும் நேரார் - செருவறைந்து
பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
'வாழைக்காய் உப்புறைத்தல் இல்'.

விளக்கவுரை :

30. இல்வாழ்க்கை

327. நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்!
'வித்தின்றிச் சம்பிரதம் இல்'.

விளக்கவுரை :

328. உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித்
தாம்பெற் றதனால் உவவார் 'பெரிதகழின்
பாம்புகாண் பாரும் உடைத்து'.

விளக்கவுரை :

329. அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்'.

விளக்கவுரை :

330. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பில்தம்
இல்லாளே வந்த விரும்தோம்பிச் - செல்வத்து
இடரின்றி ஏமாந் திருந்தாரே 'நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books