பழமொழி நானூறு 321 - 325 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 321 - 325 of 400 பாடல்கள்

321. உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே
'கருக்கினால் கூறைகொள் வார்'.

விளக்கவுரை :

322. அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்
எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே
'மகன்மறையாத் தாய்வாழு மாறு'.

விளக்கவுரை :

323. உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை- தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.

விளக்கவுரை :

324. தன்னின் வலியானைத் தானுடையன் அல்லாதான்
என்ன குறையன் இளையரால்? மன்னும்
புலியிற் பெருந்திறல வாயினும் 'பூசை
எலியில் வழிப்பெறா பால்'.

விளக்கவுரை :

325. கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும்
உடையர் எனப்பட்டு ஒழுகிப் பகைவர்
உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
'படையின் படைத்தகைமை நன்று'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books