பழமொழி நானூறு 316 - 320 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 316 - 320 of 400 பாடல்கள்

316. உரைத்தாரை மீதுரா மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப !
'நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு'.

விளக்கவுரை :

317. அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரின்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி
வில்லொடுநே ரொத்த புருவத்தாய் ! அஃதன்றோ
'கல்லொடு கையெறியு மாறு'.

விளக்கவுரை :

318. வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா
உரைநடை மன்னருள் புக்காங்(கு) அவையுள்
நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக
'திரையவித்து ஆடார் கடல்'.

விளக்கவுரை :

319. காத்தாற்று நிற்பாரைக் கண்டால் எதிருரையார்
பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல்
யாத்ததே சில்லார் படையாண்மை 'நாவிதன்வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல்'

விளக்கவுரை :

320. இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books