பழமொழி நானூறு 311 - 315 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 311 - 315 of 400 பாடல்கள்

29. படைவீரர்

311. தூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃதன்றிக்
காப்பின் அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
'யாப்பினுள் அட்டிய நீர்'.

விளக்கவுரை :

312. உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ 'உண்ணா
இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.

விளக்கவுரை :

313. ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமைக் காத்தோம்பி 'வாங்கும் எருதாங்கு
எழாஅமைச் சாக்கா டெழல்'.

விளக்கவுரை :

314. தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'.

விளக்கவுரை :

315. செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
'சோரம் பொதியாத வாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books