பழமொழி நானூறு
296 - 300 of 400 பாடல்கள்
296. தழங்குரல் வானத்துத் தண்பெயல்
பெற்றால்
கிழங்குடைய
வெல்லாம் முளைக்குமோர் ஆற்றால்
விழைந்தவரை
வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
'பழம்பகை நட்பதால் இல்'.
விளக்கவுரை :
297. வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார்
செய்வதென்?
கள்ளம்
உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப்
பொய்கைப் புனலூர ! அஃதன்றோ
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.
விளக்கவுரை :
298. இம்மைப் பழியும் மறுமைக்குப்
பாவமும்
தம்மைப்
பரியார் தமரா அடைந்தாரின்
செம்மைப்
பகைகொண்டு சேராதார் தீயரோ?
'மைம்மைப்பின் நன்று குருடு.'
விளக்கவுரை :
299. பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா
ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி
வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு'.
விளக்கவுரை :
300. வன்பாட் டவர்பகை கொள்ளினும்
மேலாயோர்
புன்பாட்
டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட
பூங்காவிக் கானலம் தண்சேர்ப்ப!
'வெண்பாட்டம் வெள்ளம் தரும்'.
விளக்கவுரை :