பழமொழி நானூறு 301 - 305 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 301 - 305 of 400 பாடல்கள்

301. வாள்திற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்
பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
'உருவு திருவூட்டு மாறு'.

விளக்கவுரை :

302. வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாம் கொள்யானைப் பூங்குன்ற நாட!
'வலியலாந் தாக்கு வலிது'.

விளக்கவுரை :

303. ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை எனைத்தும் வியவற்க - துன்னினார்
நன்மை யிலராய் விடினும் நனிபலராம்
'பன்மையிற் பாடுடைய தில்'.

விளக்கவுரை :

304. தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப்
பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்
வாய்முன்ன தாக வலிப்பினும் 'போகாதே
நாய்ப்பின்ன தாகத் தகர்'.

விளக்கவுரை :

305. யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books