பழமொழி நானூறு 286 - 290 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 286 - 290 of 400 பாடல்கள்

286. எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
'தனிமரம் காடாதல் இல்'.

விளக்கவுரை :

287. முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப்
பின்னலிதும் என்றிருத்தல் பேதைமையே - பின்சென்று
காம்பன்ன தோளி! கடிதிற் 'கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல்'.

விளக்கவுரை :

288. நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! 'குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல்'.

விளக்கவுரை :

289. தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமையைக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'.

விளக்கவுரை :

290. முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
'ஒக்கலை வேண்டி அழல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books