பழமொழி நானூறு 281 - 285 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 281 - 285 of 400 பாடல்கள்

281. வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்'.

விளக்கவுரை :

282. தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்
வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்
'ஏமரார் கோங்கு ஏறினார்'.

விளக்கவுரை :

283. உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ
'கூன்மேல் எழுந்த குரு'.

விளக்கவுரை :

284. பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளஎழுந்து
ஆடு பவரோடே ஆடார் உணர்வுடையார்
'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

விளக்கவுரை :

28. பகைத்திறம் தெரிதல்

285. வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட ! யார்க்கானும்
'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books