பழமொழி நானூறு 276 - 280 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 276 - 280 of 400 பாடல்கள்

276. இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று
கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு
மூடிய எனைத்தும் உணரா முயறல்
'கடிய கனைத்து விடல்'.

விளக்கவுரை :

277. சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'

விளக்கவுரை :

278. செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்
ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும் ஆகாது தீதரம் அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.

விளக்கவுரை :

279. பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார்
இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக் கொண்டு புகுதல் 'குவளையைத்
தன்னாரால் யாத்து விடல்'.

விளக்கவுரை :

280. மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை.'

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books