பழமொழி நானூறு 271 - 275 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 271 - 275 of 400 பாடல்கள்

271. செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய் ! 'கூரிது
எருத்து வலியநன் கொம்பு'.

விளக்கவுரை :

272. வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை
மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் - ஆய்ந்த
நலமென் கதுப்பினாய் ! நாடின 'நெய்பெய்த
கலனேநெய் பெய்து விடும்'.

விளக்கவுரை :

273. ஆண்டகை மன்னரைத் சார்ந்தார்தாம் அல்லுறினும்
ஆண்டொன்று வேண்டுதும் என்பது உரையற்க
பூண்தாங்கு மார்ப! பொருள்தக்கார் 'வேண்டாமை
வேண்டிய தெல்லாம் தரும்'.

விளக்கவுரை :

274. காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்
ஏவல் வினைசெய் திருந்தார்க்(கு) உதவடுத்தல்
ஆவணைய நின்றதன் கன்று 'முலையிருப்பத்
தாயணல் தான்சுவைத் தற்று'.

விளக்கவுரை :

275. சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித்
திறத்தின் உரைப்பாரைக்கொன் (று) ஆகாத தில்லை
விறற்புகழ் மன்னர்க்(கு) உயிரன்ன ரேனும்
'புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books