பழமொழி நானூறு 261 - 265 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 261 - 265 of 400 பாடல்கள்

261. நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே 'புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு'.

விளக்கவுரை :

262. மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர்'.

விளக்கவுரை :

263. செயல்வேண்டா நல்லன செய்விக்கும் தீய
செயல்வேண்டி நிற்பின் விலக்கும் இகல்வேந்தன்
தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்
'முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்'.

விளக்கவுரை :

264. செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.

விளக்கவுரை :

265. தீயன வல்ல செயினும் திறல்வேந்தன்
காய்வன சிந்தியார் சுற்றறிந்தார் - பாயும்
'புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில் அதுவே
வளிமுன்னர் வைப்பாரம் இல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books