பழமொழி நானூறு 256 - 260 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 256 - 260 of 400 பாடல்கள்

256. எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்
ஒல்லை வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.

விளக்கவுரை :

257. போலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்திறை யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்'.

விளக்கவுரை :

26. அமைச்சர்

258. கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும் - மல்கித்
தலைப்பாய் இழிதரு தண்புனல் 'நீத்தம்
மலைப்பெயல் காட்டும் துணை'.

விளக்கவுரை :

259. செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய் முறுவலநற் சின்மொழியாய்! 'செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்'.

விளக்கவுரை :

260. சுற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
'சுரையாழ் நரம்பறுத் தற்று'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books