பழமொழி நானூறு 251 - 255 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 251 - 255 of 400 பாடல்கள்

251. மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப? - புன்னைப்
பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப!
'மரத்தின்கீழ் ஆகா மரம்'.

விளக்கவுரை :

252. வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக் 'கவுட்கொண்ட நீர்'.

விளக்கவுரை :

253. தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.

விளக்கவுரை :

254. கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயா(து) - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய் ! 'செய்வதென்
வல்லை அரசாட் கொளின்?'

விளக்கவுரை :

255. உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒளளியன் அல்லான்மேல் வைத்தல் 'குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books