இன்னா நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்
26. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை
செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத்
தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத்
தீய செயல்.
விளக்கவுரை :
27. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை
யுடையார்க் களைந்திடுத லின்னா
வளமை
யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண்
மூப்புப் புகல்.
விளக்கவுரை :
28. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான்
சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச்
சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான்
கோட்டி கொளல்.
விளக்கவுரை :
29. குறியறியான் மாநாக மாட்டுவித்த
லின்னா
தறியறியா(%)
னீரின் பாய்ந்தாட லின்னா
அறிவறியா
மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான்
கேட்ட மறை.
விளக்கவுரை :
30. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின
வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி
யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி
வாழு மதர்.
விளக்கவுரை :
