பழமொழி நானூறு 241 - 245 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 241 - 245 of 400 பாடல்கள்

25. அரசியல்பு

241. எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணர் ஆயினும் தகவில கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.

விளக்கவுரை :

242. சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
'முறைமைக்கு மூப்பிளமை இல்'.

விளக்கவுரை :

243. முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.

விளக்கவுரை :

244. பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
'வண்டூதா துண்டு விடல்'.

விளக்கவுரை :

245. பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால்
'பாலதலை பாலூறல் இல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books