பழமொழி நானூறு 236 - 240 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 236 - 240 of 400 பாடல்கள்

236. ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும்
வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றார் சிறியர் எனல்வேண்டா 'நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி'.

விளக்கவுரை :

237. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட ! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.

விளக்கவுரை :

238. பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை கோவதென்? மின்னேர் மருங்குலாய் !
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.

விளக்கவுரை :

239. சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயனான் 'இல்லை
உயிருடையார் எய்தா வினை.'

விளக்கவுரை :

240. நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books