பழமொழி நானூறு 231 - 235 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 231 - 235 of 400 பாடல்கள்

231. ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே 'பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும்'.

விளக்கவுரை :

232. முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
'முதல்இலார்க்(கு) ஊதியம் இல்'.

விளக்கவுரை :

233. பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை
நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர்
உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம்
'தொகற்பால போழ்தே தொகும்'.

விளக்கவுரை :

234. குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே
உய்வதற்(கு) உய்யா இடம்'.

விளக்கவுரை :

235. இதுமன்னும் தீதென்று இசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரை தண்சேர்ப்ப !
'தீநாள் திருவுடையார்க்(கு) இல்'

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books