பழமொழி நானூறு 221 - 225 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 221 - 225 of 400 பாடல்கள்

221. வழங்கார் வலியலார் வாய்ச்சொல்லும் பொல்லார்
உழந்தொருவர்க்(கு) உற்றால் உதவலும் இல்லார்
இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்
'பழஞ்செய்போர் பின்று விடல்'.

விளக்கவுரை :

222. ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின்
நற்செய்கை செய்வார்போல் காட்டி நசையழுங்க
வற்கென்ற செய்கை அதுவால் அவ்வாயுறைப்
புற்கழுத்தில் யாத்து விடல்'.

விளக்கவுரை :

223. அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.

விளக்கவுரை :

224. மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி னாடு மலைநாட ! அஃதன்றோ
'பள்ளியுள் ஐயம் புகல்'

விளக்கவுரை :

225. இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்
வசையன்று வையத்(து) இயற்கை - அஃதன்றிப்
பசைகொண் டவன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின்
'நசைகொன்றான் செல்லுலகம் இல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books