பழமொழி நானூறு 216 - 220 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 216 - 220 of 400 பாடல்கள்

216. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
'நாய்பெற்ற தெங்கம் பழம்'

விளக்கவுரை :

217. முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்
'அழகொடு கண்ணின் இழவு'.

விளக்கவுரை :

218. நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென் அஞ்சா விடிலென் 'குருட்டுக்கண்
துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?'

விளக்கவுரை :

219. படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார் பொருளைத்
தொடருந்தம் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் 'குடரொழிய
மீவேலி போக்கு பவர்'.

விளக்கவுரை :

220. விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books