பழமொழி நானூறு 211 - 215 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 211 - 215 of 400 பாடல்கள்

211. கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.

விளக்கவுரை :

212. கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட் டிருப்பார்
இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும் கைப்பாய் விடும்'.

விளக்கவுரை :

23. நன்றியில் செல்வம்

213. அல்லது செல்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செல்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் 'தீயன
ஆவதே போன்று கெடும்'.

விளக்கவுரை :

214. தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்
கல்மேல் இலங்கு மலைநாட ! 'மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு'.

விளக்கவுரை :

215. பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
சுற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புணல் ஊர!
'மரங்குறைப்ப மண்ணா மயிர்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books