பழமொழி நானூறு 206 - 210 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 206 - 210 of 400 பாடல்கள்

206. மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப !
'இறந்தது பேர்தறிவார் இல்'.

விளக்கவுரை :

207. அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா - இமையோரும்
அக்காலத்(து) ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
'நற்காப்பின் தீச்சிறையே நன்று'.

விளக்கவுரை :

208. ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'.

விளக்கவுரை :

209. தொடிமுன்கை நல்லாய்அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!
'மூரியைத் தீற்றிய புல்'.

விளக்கவுரை :

210. முன்னை யுடையது காவாது இகந்திருந்து
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் 'வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books