பழமொழி நானூறு 201 - 205 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 201 - 205 of 400 பாடல்கள்

201. வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின்
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவாறு
ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்
'துளியீண்டில் வெள்ளம் தரும்'.

விளக்கவுரை :

202. உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'.

விளக்கவுரை :

203. களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'.

விளக்கவுரை :

204. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து
வாடிய காலத்தும் வட்குபவோ! - வாடி
வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்
'புலித்தலையை நாய்மோத்தல் இல்'

விளக்கவுரை :

22. பொருளைப் பெறுதல்

205. தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
'நந்துநீர் கொண்டதே போன்று'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books