பழமொழி நானூறு 196 - 200 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 196 - 200 of 400 பாடல்கள்

21. பொருள்

196. தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? 'வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது'.

விளக்கவுரை :

197. ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'கடலுள்ளும் காண்பவே நன்கு'.

விளக்கவுரை :

198. அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கருமம் உடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! 'குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றார் இல்'.

விளக்கவுரை :

199. அருளுடை யாருமற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை
பொருபடைக் கண்ணாய் ! அதுவே 'திருவுடையார்
பண்டம் இருவர் கொளல்'.

விளக்கவுரை :

200. உடையதனைக் காப்பான் உடையான் அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும் - அடையின்
'புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books